Loading
லுட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம்
Amman KovilAmman KovilAmman Kovil
Landline
info@ammankovil.ch
Switzerland

புதிய ஆலய நிர்மாணம்

துர்க்கா வளாகம் – இன்வில்

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற மூதுரை வழி வாழ்ந்தும் தலைமுறை கடந்தும் சைவப் பெருமக்களின் சன்மார்க்க இறை வழிபாட்டிடமாகவும், சைவசமய பரம்பரையின் சாட்சியமாகவும் விளங்கவிருக்கும் துர்க்கை அம்மன் ஆலயம் 2080 சதுர மீற்றர் பரப்பளவில் இன்வில் என்னும் கிராமத்தில் நிரந்தர திருத்தலமாக அமையவுள்ளது.

புதிய ஆலயத்தின் வரைபடத்தை பார்வையிட
புதிய ஆலயத்தின் வரைபடத்தை பார்வையிட
ஒளிப்படங்கள்

புதிதாக அமைக்கப்படவுள்ள ஆலயத்தின் மாதிரி வரைபடம்

திருப்பணி

திருக்கோவில் திருப்பணியில் இணைந்திட வாரீர்

சுந்தரமாய், அழகின் சூட்சுமமாய் சுவர்ண பூமியென போற்றப்படும் சுவிற்சலாந்தில் லுட்சேர்ன் மாநிலத்திலுள்ள றூத் என்னும் பதியில் அமர்ந்திருத்து அருள்பாலிக்கும் துர்க்கை அம்மன், சுவிற்சர்லாந்தில் முதன் முதலில் ஆகமரீதியான வழிபாட்டு முறைகளுடன் கூடிய சைவ ஆலயங்களில் ஒன்றாக அமையப் பெற்றது. புலம்பெயர்ந்து வாழும் எமது தலைமுறை, அடுத்த தலைமுறைச் சந்ததி மத்தியில் இறைபக்தி உணர்வையும், கலை கலாச்சார விழுமியங்கள் பேணலையும் ,பல்சமய மக்களின் மன அமைதிக்கான திருவாராதனை ஆலயமாகவும் அனைவரையும் ஒன்றிணைத்து இயங்கி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற மூதுரை வழி வாழ்ந்தும் தலைமுறை கடந்தும் சைவப் பெருமக்களின் சன்மார்க்க இறை வழிபாட்டிடமாகவும், சைவசமய பரம்பரையின் சாட்சியமாகவும் விளங்கவிருக்கும் துர்க்கை அம்மன் ஆலயம் 2080 சதுர மீற்றர் பரப்பளவில் இன்வில் என்னும் கிராமத்தில் நிரந்தர திருத்தலமாக அமைவதற்கான சாத்தியங்கள் உருவாகியுள்ளது. சைவ சமயத்தவர்களின் சிவநெறி வேத, ஆகம இறை வழிபாட்டிற்கும், மத்திய மாநில அடியவர்களது வருகைக்கும் ஏதுவாகவும், புறநிலைச்சூழல்கள் சாதகமான நிலைமையுடன் அமையப்பெறவுள்ள ஆலயத்தினை துர்க்கை அம்மன் ஆலயத்திற்காக சொந்தமாக்கிக் கொள்வதற்கு சுமார் 3.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் தேவைப்படுகிறது.

ஊர் கூடித் தேர் இழுக்க வடம் பிடித்த பலமான இனமானத் தமிழர்களே!
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று இந்தப் பெரும் திருப்பணியில் இணைந்து அடியவர்கள் ஒரு சதுர மீற்றர் இறைவியின் நிலத்திற்காக 3500.00 சுவிஸ் பிராங்குகளை தாங்களும், தங்களின் பிள்ளைகளின் பெயராலும் திருப்பணிக்கு நன்கொடையாக வழங்குவதன் மூலம் இம் மண்ணில் வாழும் எமது எதிர்காலச் சந்ததியினரின் நன்நெறி வாழ்விற்கு உங்கள் பங்களிப்பு நிச்சயம் காத்திரமான அங்கம் வகிக்கும்.

“துர்க்கா-வளாகம் இன்வில்” அம்மன் ஆலயத்தின் பட்டையத்தில் தங்களால் உறுதிப்படுத்தப்படும் பெயர் பதியப்பட்டு திருப்பணி தொண்டின் மகிமையை சந்ததி கடந்தும் வரலாற்றில் நினைவில் கொள்ளப்படும்.

துர்க்கை அம்மனின் அருளாசியுடன் அனைத்து நலனும் பெற்று உங்கள் சந்ததிகளுடன் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்கின்றோம்.

திருப்பணி

ஆலய திருப்பணி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்கியோர் விபரம்

ஆலய திருப்பணியாளர்களை பார்வையிட

துர்க்கா-வளாகம் இன்வில்

துர்க்காவளாகம் கட்டித்தரும் நிறுவனத்துடன் ஆலயம் கட்டுவதற்கு Baugesuch செய்வதற்காக அவர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

துர்க்காவளாகம்-இன்வில் திருப்பணி சபை

திரு. செல்லக்கண்டு விநாயகலிங்கம்

076 427 15 75

திரு. சீவரட்னம் கோபாலச்சந்திரன்

076 777 55 54

திரு. கணபதிப்பிள்ளை உருத்திரன்

079 552 22 88

திரு. குமாரசாமி கானவேள்

078 618 14 96

திரு. காங்கேஸ்வரன் வினோகரன்

076 544 61 57

துர்க்கா-வளாகம் இன்வில்

21.06.2024 காலை 8:30 மணி அளவில் இன்வில் பகுதியில் உள்ள 2080 சதுர மீட்டர் காணியை லுட்சேர்ன் துர்க்கை அம்மனுக்கு சட்டப்படி பதிவு செய்து சொந்தம் ஆக்கியுள்ளோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு அறிய தருகின்றோம்.

Archives

We understand the importance of approaching each work integrally and believe in the power of simple.

Melbourne, Australia
(Sat - Thursday)
(10am - 05 pm)