திருக்கோவில் திருப்பணியில் இணைந்திட வாரீர்
சுந்தரமாய், அழகின் சூட்சுமமாய் சுவர்ண பூமியென போற்றப்படும் சுவிற்சலாந்தில் லுட்சேர்ன் மாநிலத்திலுள்ள றூத் என்னும் பதியில் அமர்ந்திருத்து அருள்பாலிக்கும் துர்க்கை அம்மன், சுவிற்சர்லாந்தில் முதன் முதலில் ஆகமரீதியான வழிபாட்டு முறைகளுடன் கூடிய சைவ ஆலயங்களில் ஒன்றாக அமையப் பெற்றது. புலம்பெயர்ந்து வாழும் எமது தலைமுறை, அடுத்த தலைமுறைச் சந்ததி மத்தியில் இறைபக்தி உணர்வையும், கலை கலாச்சார விழுமியங்கள் பேணலையும் ,பல்சமய மக்களின் மன அமைதிக்கான திருவாராதனை ஆலயமாகவும் அனைவரையும் ஒன்றிணைத்து...
31.01.2022 திங்கட்கிழமை Ober Dorf பாடசாலை
31.01.2022 திங்கட்கிழமை Ober Dorf பாடசாலையிருந்து இந்து மத சைவ சித்தாந்தங்களை அறிந்து கொள்வதற்காக ஆலயத்திற்கு வந்திருந்த மாணவர்களுக்கு இந்து மதத்தின் வரலாற்று சிறப்புக்களையும் ஆலய வழிபாட்டு முறைகளையும் எமது கலை கலாசார முறைமைகளையும் ஆலய பிரதமகுருவான திரு. சிவசண்முகநாதகுருக்கள் அவர்களுடன் செல்வன் தேவதாசன் அனுஜன் அவர்களும் மாணவர்களுக்கு எமது மதம் சார்ந்த விடயங்களை மிகவும் சிறப்பாக யேர்மன் மொழியில் தெளிவுபடுத்தி வருகை தந்த மாணவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
அபிராமி பட்டர் விழா 31.01.2022
அம்பிகை அடியார்களே இச்சிறப்பு மிக்க அபிராமிபட்டர் விழா துர்க்கை அம்மன் ஆலயத்தில் 31.01.2022 திங்கட்கிழமை மாலை 17:00 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாக துர்க்கை அம்மன் திருவருள் கைகூடியுள்ளது. அமாவாசை நாளன்று வருகை தந்து நடைபெறும் அபிசேகம், பூசை, ஊஞ்சல் பாட்டு நிகழ்விலும் கலந்து சிறப்பித்து தாயக உறவுகளின் விடிவிற்கும் பிரார்த்தித்து இஸ்டசித்திகளை பெற்று கொள்ளும் வண்ணம் வேண்டிக் கொள்கின்றோம். தை அமாவாசை விரதமும்… அபிராமி பட்டரின் பக்தியும்… அபிராமி பட்டர்...
St. Martin Root பாடசாலையில் இருந்து மாணவர்கள் வருகை
25.01.2022 செவ்வாய்க்கிழமை St. Martin Root பாடசாலையில் இருந்து ஆலயத்திற்கு இந்து மத சைவ சித்தாந்தங்களை அறிந்து கொள்வதற்காக வந்திருந்த மாணவர்களுக்கு இந்து மதத்தின் வரலாற்று சிறப்புக்களையும் ஆலய வழிபாட்டு முறைகளையும் எமது கலை கலாசார முறைமைகளையும் ஆலய பிரதமகுருவான திரு. சிவசண்முகநாதகுருக்கள் அவர்களும் அவர்களின் புதல்வியுமான சுவஸ்திகா அவர்களும் மாணவர்களுக்கு எமது மதம் சார்ந்த விடயங்களை மிகவும் சிறப்பாக யேர்மன் மொழியில் தெளிவுபடுத்தி வருகை தந்த மாணவர்களுக்கு நன்றிகளையும்...
அங்கத்தவர் கூட்டம் – 05.02.2022
ஆலய வளர்ச்சியில் அக்கறை கொண்டு பங்களிப்புச் செய்து வரும் அங்கத்தவர்கள் மற்றும் உபயகாரர்கள் அனைவருக்கும், அங்கத்தவர் கூட்டம் 05.02.2022 அன்று நாட்டின் சட்டதிட்டங்களிற்கமைவாக நடைபெறும். ஆலய வளர்ச்சி தர்ம நெறியென்பது அடியார்களாகிய தங்களின் ஒத்துழைப்பில்தான் தங்கியுள்ளது. அதனால்தான் தொண்டர்களாகிய நாம் இவ்வாலயத்தை சிறப்பாக வழிநடத்திச்செல்ல முடியும். அம்பிகை அங்கத்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு எமக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரியப்படுத்துவதன் மூலம் மேலும் சிறப்பான முறையில் ஆன்மீக பணிகளையும் தர்ம காரியங்களையும் முன்னெடுத்துச்செல்ல...
தைப்பூசத் திருநாள் – 18-01-2022
தைப்பூசத் திருநாள் 18-01-2022 அம்பிகை அடியார்களே லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் தைப்பூசத்திருநாள் விசேட பூசை 18.01.2022 செவ்வாய்க்கிழமை மாலை 17:30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாக துர்க்கை அம்மன் திருவருளும் செந்தமிழ்ப்பெருமான் அருட்கருணையும் கைகூடியுள்ளது. 17:00 கும்பபூசை 18:15 பூசை ஆரம்பம் 20:00 வீதியுலா வருதல் ‘ 17:30 அபிசேகம் 19:00 வசந்தமண்டபபூசை 20:45 வீபூதி பிரசாதம் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குதல், அன்னமூட்டுதல், ஆயகலைகளை ஆரம்பித்தல் போன்றவைகளை செய்ய விரும்புவோர்...
தைப்பொங்கல் – 14.01.2022
அம்பிகை அடியார்களே! நிகழும் சர்வமங்களகரமான பிலவ வருடம் தைத்திங்கள் 1ம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2052 (14.01.2022) வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் திருநாளாகும். இத்திருநாளில் லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. அடியவர்கள் தைத்திருநாளன்று வருகை தந்து நடைபெறும் அபிசேகம், பூசை, பொங்கல் நிகழ்விலும் கலந்து சிறப்பித்து தாயக உறவுகளின் விடிவிற்கும் பிரார்த்தித்து இஸ்டசித்திகளை பெற்று கொள்ளும் வண்ணம் வேண்டிக் கொள்கின்றோம். காலை...
திருப்பணியில் இணைந்திட வாரீர்
சுந்தரமாய், அழகின் சூட்சுமமாய் சுவர்ண பூமியென போற்றப்படும் சுவிற்சலாந்தில் லுட்சேர்ன் மாநிலத்திலுள்ள றூத் என்னும் பதியில் அமர்ந்திருத்து அருள்பாளிக்கும் எமது துர்க்கை அம்மன், சுவிற்சர்லாந்தில் முதன் முதலில் ஆகமரீதியான வழிபாட்டு முறைகளுடன் கூடிய இந்து ஆலயமாக அமையப் பெற்ற புலம்பெயர்ந்து வாழும் எமது தலைமுறை மற்றும் அடுத்த தலைமுறை மக்கள் மத்தியில் இறை உணர்வையும், ஆற்றுப்படுத்தலையும், கலாச்சார விழுமியங்களை பேணலையும் நிகழ்த்திவருவதுடன், சமூக நிலையமாக அனைவரையும் ஒன்றிணைத்து இயங்கி வருவதை...
ஆங்கிலப்புத்தாண்டு சிறப்பு பூசை
அம்பிகை அடியார்களே! நிகழும் சர்வமங்களகரமான பிலவ வருடம் 1.1.2022 சனிக்கிழமை காலை 9:00 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் அபிசேக பூசைகள் நடைபெற்று துர்க்கை அம்மன் உள்வீதி வலம் வந்து மதியம் அன்னதானம் வழங்கப்படும். மாலை 18:00 மணிக்கு அபிசேக பூசைகள் நடைபெற்று துர்க்கை அம்மன் உள்வீதி வலம் வந்து அன்னதானம் வழங்கப்படும். இவ் புத்தாண்டு தினத்தில் அடியவர்கள் வருகை தந்து நடைபெறும் அபிசேகம். பூசை, துர்க்கை அம்மன் விதியுலா என்பனவற்றில்...
- 1
- 2