சுந்தரமாய், அழகின் சூட்சுமமாய் சுவர்ண பூமியென போற்றப்படும் சுவிற்சலாந்தில் லுட்சேர்ன் மாநிலத்திலுள்ள றூத் என்னும் பதியில் அமர்ந்திருத்து அருள்பாளிக்கும் எமது துர்க்கை அம்மன், சுவிற்சர்லாந்தில் முதன் முதலில் ஆகமரீதியான வழிபாட்டு முறைகளுடன் கூடிய இந்து ஆலயமாக அமையப் பெற்ற புலம்பெயர்ந்து வாழும் எமது தலைமுறை மற்றும் அடுத்த தலைமுறை மக்கள் மத்தியில் இறை உணர்வையும், ஆற்றுப்படுத்தலையும், கலாச்சார விழுமியங்களை பேணலையும் நிகழ்த்திவருவதுடன், சமூக நிலையமாக அனைவரையும் ஒன்றிணைத்து இயங்கி வருவதை நீங்கள் அனைவரும் அறிந்ததே.
எங்கள் தலைமுறை கடந்தும் சைவப் பெருமக்களின் சன்மார்க்க வாழ்வாதாரமாகவும், சைவசமய பரம்பரையின் சாட்சியமாகவும் விளங்கயிருக்கும் இவ்வாலயம் இறையருளால் புதியதோர் இடத்தில் அருள்பாலிக்க சாத்தியங்கள் உருவாகியுள்ளது.
எமது சமய நடவடிக்கைகளுக்கும் அடியவர்களது வருகைக்கும் ஏதுவாக அமையப்பெறவுள்ள இவ்விடத்தினை துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு சொந்தமாக்கிக் கொள்வதற்கு சுமார் 45 லட்சம் சுவிஸ் பிராங்குகள் தேவைப்படுகிறது (மூன்று மாடிகளுடன்) புலம்பெயர்ந்த தேசத்தில் வாழும் உங்களது சமய வாழ்க்கையுடன், இந்தப் பணியில் தங்களின் மேலான பங்களிப்பினை வாரி வழங்கி உதவிட வேண்டுகிறோம்.
இந்தப் பெரும் திருப்பணியில் அடியவர்கள் ஒவ்வொரு குடும்பமும் 10’000.00 முதல் 5’000.00 சுவிஸ் பிராங்குகளை தங்களின் பங்களிப்பாக வழங்குவதன் மூலம் இம் மண்ணில் வாழும் எமது எதிர்காலச் சந்ததியினரின் நன்நெறி வாழ்விற்கு உங்கள் பங்களிப்பு நிச்சயம் காத்திரமான பாத்திரம் வகிப்பதோடு இந்த ஆலய உருவாக்கத்தில் உரித்தாளராகவும் தங்களை இணைத்துக்கொள்ள முடியும் என்பதை இத்தருணத்தில் தெரிவிக்க விரும்புகின்றோம்.
புதிய இடத்தினை கொள்வனவு செய்வதற்கு வேண்டிய 15 லட்சம் சுவிஸ் பிராங்குகள் உடனடியாக தேவைப்படும் என்பதால், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் குறைந்தது (முடிந்தவரை) 10’000.00 முதல் 5’000.00 சுவிஸ் பிராங்குகளை அன்பளிப்பாக முடிந்தவரை ஒரே தடவையில் தந்துதவக் கோருகின்றோம். அவ்வாறு ஒரே தடவையில் தரமுடியாவிடத்தில், முதற்தடவையாக குறைந்தது 3000 சுவிஸ் பிராங்குகளையும் அடுத்தடுத்த மாதங்களில் குறைந்தது 6 மாத்த்துக்குள் மிகுதியாகவுள்ளதையும் உரிய காலப்பகுதியில் செலுத்திட வேண்டுகின்றோம்.
மேலதிகமாக நீங்கள் பங்களிப்புச் செய்ய விரும்பின் ஆலய நிர்வாக சபையினரிடம் அல்லது இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நிதி சேகரிப்புக்குழுவினரிடம் தெரியப்படுத்தலாம். இவ்வாறான நிதி பங்குகளில் இணைந்து கொள்ளும் குடும்பங்கள் அனைவரும் லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் சட்டரீதியான தலைமுறை உரித்தாளராக இருப்பீர்கள் என்பதனை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் துர்க்கை அம்மனின் அருளாசியுடன் அனைத்து நலனும் பெற்று உங்கள் சந்ததிகளுடன் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்கின்றோம்.
“நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.”
லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம்
10.12.2021
Comment(1)
Gopalachandran Seevaratnam says:
07/01/2022 at 11:54All the best wishes