திருக்கோவில் திருப்பணியில் இணைந்திட வாரீர்
சுந்தரமாய், அழகின் சூட்சுமமாய் சுவர்ண பூமியென போற்றப்படும் சுவிற்சலாந்தில் லுட்சேர்ன் மாநிலத்திலுள்ள றூத் என்னும் பதியில் அமர்ந்திருத்து அருள்பாலிக்கும் துர்க்கை அம்மன், சுவிற்சர்லாந்தில் முதன் முதலில் ஆகமரீதியான வழிபாட்டு முறைகளுடன் கூடிய சைவ ஆலயங்களில் ஒன்றாக அமையப் பெற்றது. புலம்பெயர்ந்து வாழும் எமது தலைமுறை, அடுத்த தலைமுறைச் சந்ததி மத்தியில் இறைபக்தி உணர்வையும், கலை கலாச்சார விழுமியங்கள் பேணலையும் ,பல்சமய மக்களின் மன அமைதிக்கான திருவாராதனை ஆலயமாகவும் அனைவரையும் ஒன்றிணைத்து...