1

அங்கத்தவர் கூட்டம் – 05.02.2022

ஆலய வளர்ச்சியில் அக்கறை கொண்டு பங்களிப்புச் செய்து வரும் அங்கத்தவர்கள் மற்றும் உபயகாரர்கள் அனைவருக்கும், அங்கத்தவர் கூட்டம் 05.02.2022 அன்று நாட்டின் சட்டதிட்டங்களிற்கமைவாக நடைபெறும்.

ஆலய வளர்ச்சி தர்ம நெறியென்பது அடியார்களாகிய தங்களின் ஒத்துழைப்பில்தான் தங்கியுள்ளது. அதனால்தான் தொண்டர்களாகிய நாம் இவ்வாலயத்தை சிறப்பாக வழிநடத்திச்செல்ல முடியும். அம்பிகை அங்கத்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு எமக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரியப்படுத்துவதன் மூலம் மேலும் சிறப்பான முறையில் ஆன்மீக பணிகளையும் தர்ம காரியங்களையும் முன்னெடுத்துச்செல்ல முடியும் என்பதை தெரியப்படுத்துகின்றோம்.

இடம்:  லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம்

காலம்: 05.02.2022 சனிக்கிழமை

நேரம்:  மாலை 15:00 மணி

நிகழ்ச்சி நிரல்

 • இறைவணக்கம்
 • அகவணக்கம்
 • தலைமையுரை
 • ஆண்டறிக்கை
 • நிதி அறிக்கை
 • ஆலய வளர்ச்சி சம்பந்தமான உங்கள் கருத்துக்கள்
 • நன்றி உரை

குறிப்பு:-

ஆலயம் சார்ந்த ஆக்கபூர்வமான பிரேரணைகளை கூட்டத்திற்கு 10 நாட்களுக்கு முன்னதாக எழுத்து மூலமாக ஆலயத்திற்கு கிடைக்கக் கூடியதாக தருமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

நன்றி

துர்க்கை அம்மன் ஆலய பரிபாலன சபை

Comment(1)

 1. Reply
  Gopalachandran Seevaratnam says:

  நிர்வாகம் மிக சிறப்புற நடைபெறுவது மகிழ்ச்சியான விடையம். அத்துடன் விசேட பூசை நேரங்களை சரியாக தொடக்கம் மற்றும் முடிவை நடைமுறைப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
  உங்கள் பணிமேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.

  அன்புடன் சீ. கோபால்

Post a comment