பங்குனித் திங்கள்

பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்நாளில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவர். சிறப்பாகக் கண்ணகி அம்மன் ஆலயங்களில் பங்குனித் திங்களில் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம். பெண்கள் அன்று விரதமிருந்து அபிராமி அந்தாதி முதலிய பக்திப் பாடல்களைப் படித்து மறுநாள் உதயத்திற்கு முன் பராயணம் செய்வர். இப்படிச் செய்வதால் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வர்.

Continue reading

ஆடிச் செவ்வாய்

அம்பாளை வழிபாடு செய்வதில், ஆடி மாதம் முக்கியமானதாக இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆடி வெள்ளி வழிபாடு போலவே, ஆடி செவ்வாய்க்கிழமையும் சில சிறப்புகளைக் கொண்டுள்ளது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில், அம்பாளை வழிபட்டு ‘மங்கல கௌரி விரதம்’ கடைப்பிடித்து வந்தால், நற்பலன்களைப் பெறலாம். ஆடிச்செவ்வாய் அன்று அன்னதானம் செய்வது, மற்ற தினங்களில் அன்னதானம் செய்தால் கிடைக்கும் பலன்களை விட அதிக பலன்களைப்...

Continue reading

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்ததகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கவும் வேண்டி சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்ததை கடைப்பிடிப்பார்கள். வரலட்சுமி விரதத்தன்று வரலட்சுமி தாயாரை மனதால் வேண்டினால், ஆதி லட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, வித்யா லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளையும் வேண்டிய பலன் ஒரு சேரக் கிடைக்கும் என்பது ஐதீகம். இவர்கள்...

Continue reading

ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். அம்மன் பிறந்தநாள். ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூர விழா சைவ ஆலயங்களில்...

Continue reading

நவராத்திரி விரதம்

சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் ஆதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. விரதகாலம் நவராத்திரி விரதம் புரட்டாதி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தி தேவியைக் குறித்து நோற்கப்படும்விரதமாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை...

Continue reading

கேதார கௌரி விரதம்!!

இவ்விரதமானது அம்பிகை சிவனின் உடலில் தான் ஒரு பாதியாக இணைவதற்காக மேற்கொண்ட விரதமாகும். இத்தகைய சிறப்பு வாய்த்த இவ்விரதத்தை மேற்கொள்வதால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். புரட்டாசி மாதத்தில் வருகின்ற வளர்பிறை அஷ்டமியில் தொடங்கி, 21 நாட்கள் விரதத்தை தொடர்ந்து அமாவாசை நாளில் தீபாவளி அன்று நிறைவு பெறும். 21 நாட்கள் உபவாசம் இருந்து முறையாக இவ்விரதத்தினை அனுஷ்டிப்பது சிறப்பாகும். எனினும் உடல் நிலை முடியாதவர்கள் 9 அல்லது 3...

Continue reading